என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அமெரிக்காவில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து"
பாஸ்டன்:
அமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் அட்லாண்டிக் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்ட எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வடக்கு பாஸ்டனுக்கு அருகே 27 கி.மீ. தொலைவில் உள்ள லாரன்ஸ், அன்டோவர், மற்றும் வடக்கு அன்டோவர் ஆகிய 3 நகரங்களில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்தது.
இதனால் கியாஸ் கசிவு ஏற்பட்டு ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கும் பரவியது. அதை தொடர்ந்து எரிவாயு குழாய் வெடித்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இருந்தாலும் கியாஸ் கசிவு தொடர்கிறது. எனவே அந்த பகுதியில் தங்கியிருக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புகை மூட்டம் மற்றும் தீயில் சிக்கி பலர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
கொலம்பியாவில் இருந்து வரும் எரிவாயு குழாயில் அழுத்தம் அதிகரிப்பு காரணமாக குழாய் வெடித்து தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறினர். நிலைமை உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக மசாசூசட்ஸ் மாகாண கவர்னர் சார்லிபாகர் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் அறிவுரையை ஏற்குமாறு குடியிருப்பு வாசிகளிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். #usGasexploded